Author: amalraj

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அட்லி, அதன்பிறகு தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் புகழ் ஏற்பட்டதால், இவரின் அடுத்த கட்ட முன்னேற்றமாக பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் தமிழ் திரையுலக நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர் இதில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பையில் தொடங்கியது. அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப்படத்தின் டைட்டில் தற்போது…

Read More

சியோமி நிறுவனம் சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் (Xiaomi TV ES Pro 86-Inch)மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. வரும் மே 31-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவி சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய 86-இன்ச் ஸ்மார்ட் டிவி விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடல் ஆனது ஐபிஎஸ் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது வெளிவந்துள்ளது. மேலும் 4கே ரெசல்யூசன், 3,840×2,160 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,120Hz MEMC motion compensation போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த 86-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி விஷனை ஆதரிக்கிறது. மேலும் 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், குவாட்-கோர் கார்டெக்ஸ்-ஏ73 சிபியு, மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு ஆதரவு போன்ற அட்டகாசமான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் சென்னை உள்ளிட்ட திரையரங்குகளின் புக்கிங் செய்வதற்கு ரசிகர்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்காக 2 மில்லியன் ரசிகர்கள் டிக்கெட் புக் செய்வதற்கு ஆர்வத்துடன் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு முன்பே ஏற்கனவே 1986-ம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 36 வருடங்களுக்கு முன்பே வசூல் சாதனையை படைத்திருக்கிறது. தற்போது அதே டைட்டிலை மீண்டும் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து எடுக்கும் படத்தில் பயன்படுத்தி வசூலை அள்ள மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார். கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் சுஜாதா கதை எழுதிய, பழைய விக்ரம் திரைப்படம் வெறும் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படம் அப்போவே சுமார் ரூபாய் 8 கோடிக்கு வசூல் சாதனை புரிந்தது…

Read More

பிரம்மாண்ட படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஷங்கர் குடும்பம் சந்தோஷத்தை இழந்து பரிதவித்து வருகிறது அவருடைய இளைய மகளான அதிதி ஷங்கர் விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். அதிதி இப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படமும் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாகும். இப்படத்தின் போஸ்டரில் அதிதி பாவாடை, தாவணியுடன் உள்ள புகைப்படம் பலராலும் கவரப்பட்டது. அச்சு அசலாக கிராமத்து பெண்ணாகவே மாறி இருந்தார் அதிதி ஷங்கர். விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விருமன் படம் திரையரங்குகளில் வெளியாக…

Read More

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்களின் ஆரம்ப வாழ்க்கையில் கை தூக்கிவிட்டாராக இருந்தவர் இயக்குனர் பாலா. மேலும் இவருடைய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. மேலும் சில நடிகர்களுக்கு நடுவில் மார்க்கெட் இழந்து விட்டாலும் மீண்டும் அவர்களின் படங்களை இயக்கிய அந்த நடிகர்களுக்கு வாழ்வு தந்தவர் பாலா. நடிப்பு தெரியாத நடிகர்களிடமும் எப்படி வேலை வாங்குவது என்பது பாலாவுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. பாலா இயக்கத்தில் சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, நான் கடவுள் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் போன்ற நடிகர்கள் சினிமாவில் முத்திரை பதிக்க பாலாவும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பாலா கலந்து கொண்டார். அதில் எந்த இயக்குனரும்…

Read More

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் பலரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்து அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வெற்றியால் அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார். அந்த வகையில் விஜய், அஜித் இவர்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் சத்தமில்லாமல் செய்த ஒரு விஷயம் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடுவது, பாடல் எழுதுவது போன்ற பல துறைகளிலும் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். அந்த வரிசையில் இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார். அப்படி பாடல் எழுதுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இவர் கவிஞர் நா முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுத்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.…

Read More

இந்தியா மிகப்பெரிய சந்தை என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே தான் பல பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்கின்றன. இந்தியாவில் அதிகரித்து இருக்கும் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு, அதிவேக இன்டர்நெட் சேவை மற்றும் எளிதான ஆன்லைன் பண பரிவர்த்தனை இவற்றின் காரணமாக பொருள்களை மக்கள் ஆன்லைனில் வாங்க பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகவே தான் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இப்படி இன்டர்நெட் உதவியால் பொருள்களை விற்று வருகிறார்கள். அப்படி, இன்டர்நெட் மூலமாக பொருள்கள் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் தான் இ காமர்ஸ் என அழைக்கப்படுகிறது. நமக்குத் தெரிந்தது அமேசான், பிளிப்கார்ட் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களைத்தான். ஆனால், சிறியதும் பெரியதுமாக சுமார் 20,000 க்கும் மேற்பட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இ காமர்ஸ் என்பது எப்படி நடக்கிறது? இ காமர்ஸ் குறித்து எழக்கூடிய ஒரு இயல்பான கேள்வி இது. அதற்கு முன்னதாக,…

Read More

சிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் 30 விதமான நன்மைகளைக் கீழே பார்க்கலாம்.1) ஊட்டச்சத்து நிறைந்தது:உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமை மிக்கப் பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது. சிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது. எனவே இது இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.2) கரோனரி தமனி கோளாறுகளைத் தடுக்கிறது:சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க…

Read More

தினம் தினம் வெயில், புகை, தூசு என நமது சருமத்தை பதம் பார்க்கும் விஷயங்கள் இன்றைய இயந்திர உலகில் அதிகம்… அவற்றில் இருந்து தப்பித்து உங்களது சருமத்தை மாசு, மருவில்லாமல் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறைக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் தரும் அந்தப் பொருட்களைப் பற்றி இப்போது பார்ப்போமா.. முகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வறண்ட சருமம் பளபளக்க : வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம்…

Read More